ADDED : ஆக 21, 2026 07:50 PM
அ நிறம் | அளவு
செஞ்சி: குடும்ப பிரச்னையில் மனம் உடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
செஞ்சி டவுன் சிங்கவரம் சாலையை சேர்ந்தவர் சேகர் மகன் மோகன் 38: கருவாடு வியாபாரம் செய்து வந்தார்.
திருமணமாகி சுவாதி 30, என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர். மோகனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது.
இதனால் மனம் உடைந்த மோகன் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
