ADDED : மார் 13, 2026 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே பைக் மோதி நடந்து சென்றவர் இறந்தார்.
விக்கிரவாண்டி அடுத்த பிடாரிப்பட்டைச் சேர்ந்தவர் ரங்கநாதன், 65; விவசாயி.
இவர் நேற்று முன்தினம் இரவு 9:45 மணியளவில் தனது நிலத்திற்குச் செல்ல பிடாரிபட்டியிலிருந்து பெரியதச்சூர் சாலையில் நடந்து சென்றார்.
அப்போது பின்னால் வந்த பைக் ரங்கநாதன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின் றனர்.

