ADDED : செப் 25, 2024 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம் : மரக்காணம் அடுத்த வைடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜேந்திரன், 39; விவசாயி. இவரது தாய் ருக்மணி, 60; மகன் புவியரசன்,10; மூவரும் நேற்று மாலை 6:00 மணியளவில் வைடப்பாக்கம் அருகே உள்ள அவர்களது நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது, மழை பெய்ததால் 3 பேரும் அங்குள்ள வேப்பமரத்தின் கீழ் நின்று கொண்டிருந்தனர். திடீரென மின்னல் தாக்கியதில், ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
படுகாயமடைந்த ருக்மணி, புவியரசன் ஆகிய இருவரும் மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.