ADDED : அக் 31, 2025 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்:  திண்டிவனம் அருகே கார் மோதி விவசாயி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், விழுக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 75; விவசாயி. நேற்று காலை அதே கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்துக்கு சென்றுவிட்டு, திண்டிவனம் - செஞ்சி மெயின் ரோடு ஓரமாக நடந்து வந்தார்.
அப்போது, திண்டிவனத்தில் இருந்து செஞ்சி நோக்கி சென்ற டாடா எட்டியாஸ் கார் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ரோஷனை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

