/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயில் நிலையங்களில் பொது மேலாளர் ஆய்வு
/
ரயில் நிலையங்களில் பொது மேலாளர் ஆய்வு
ADDED : அக் 31, 2025 02:34 AM

விழுப்புரம்:  விழுப்புரம் மற்றும் திண்டிவனம் ரயில் நிலையங்களில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு செய்தார்.
புதுச்சேரியில் நேற்று நடந்த பார்லி., பிரதிநிதிகள் குழு ஆய்வு கூட்டத்தில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கலந்து கொண்டார். இதற்காக, சென்னையில் இருந்து தனி ஆய்வு ரயில் மூலம், அவர் காலை 9:00 மணிக்கு திண்டிவனம் ரயில் நிலையம் வந்தார். அங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்டவர், கார் மூலம் புதுச்சேரி புறப்பட்டுச் சென்றார். இந்த ஆய்வின் போது சென்னை மற்றும் திருச்சி கோட்ட அதிகாரிகள் திண்டிவனம் ரயில் நிலைய மேலாளர் ராம் கேஷ்மீனா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து அவர் மதியம் விழுப்புரம் ரயில் நிலையத்தில்,  மதியம் ஆய்வு பணியில் ஈடுபட்டார்.
ரயில் நிலைய நடைமேடைகளில் குடிநீர் வசதி, மின்விசிறி வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகள் மற்றும் நடைமேடை பாலம் வசதியுடன் எக்சலேட்டர் அமைக்கும் பணியை பார்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். கட்டி முடிக்கப்பட்ட பார்சல் சர்வீஸ் அலுவலகத்தை விரைந்து திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார்.
இதை தொடர்ந்து, விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் மூலம் ரயில்வே மேம்பாலங்கள் பராமரிப்பு, சிக்னல் பாயிண்ட், தண்டவாளங்களின் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
அப்போது, கோட்ட ரயில்வே மேலாளர் பாலக் ராம்நெகி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

