/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புயல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி விழுப்புரத்தில் விவசாய சங்கம் முற்றுகை
/
புயல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி விழுப்புரத்தில் விவசாய சங்கம் முற்றுகை
புயல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி விழுப்புரத்தில் விவசாய சங்கம் முற்றுகை
புயல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி விழுப்புரத்தில் விவசாய சங்கம் முற்றுகை
ADDED : ஜன 24, 2025 10:28 PM

விழுப்புரம், ; புயல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
விழுப்புரம் நகராட்சி திடலில் நேற்று பகல் 11:30 மணிக்கு திரண்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர், வாயில் கருப்பு துணி கட்டியபடி பேரணியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர்.
போலீசார், கலெக்டர் அலுவலக வாயிலில் தடுத்து நிறுத்தியதால், அங்கு விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
மாநில செயலாளர் அய்யனார் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர்கள் சீனுவாசன், செல்வராஜ், நாராயணன், ஆனந்தவிகடன், நாகராஜன் முன்னிலை வகித்தனர். வேலாயுதம், அரிபுத்திரன், இதயதுல்லா, சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாயிகளுக்கு சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு கோஷமிட்டனர்.
பெஞ்சல் புயலால் பாதித்த விவசாயிகள் உடன் நிவாரணம் வழங்கவேண்டும்.கூட்டுறவு மற்றும் இதர வங்கிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விழுப்புரம் மாவட்டத்தில் நெல், உளுந்து பயிருக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு (2023-24) பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
அப்போது, ஏ.டி.எஸ்.பி., தினகரன் தலைமையிலான போலீசார் சமாதானபடுத்தியதால், சிறிது நேரத்தில் போராட்டத்தை கைவிட்ட விவசாயிகள், சங்க நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்த மனு கொடுத்தனர்.

