/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீட்டுமனை, நில உரிமை பட்டா விவசாயிகள் சங்கம் கோரிக்கை
/
வீட்டுமனை, நில உரிமை பட்டா விவசாயிகள் சங்கம் கோரிக்கை
வீட்டுமனை, நில உரிமை பட்டா விவசாயிகள் சங்கம் கோரிக்கை
வீட்டுமனை, நில உரிமை பட்டா விவசாயிகள் சங்கம் கோரிக்கை
ADDED : அக் 04, 2025 06:51 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், புறம்போக்கு இடங்களில் வசித்து வருபவர்களுக்கு, வீட்டு மனை, நில பட்டா வழங்க வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, மாவட்ட செயலாளர் முருகன், கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனு:
விழுப்புரம் மாவட்டம் பெரும்பகுதி கிராமங்களை கொண்டது. 70 ஆயிரம் குடும்பங்கள், வீட்டுமனையின்றி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் பலவகை புறம்போக்கு நிலங்களில் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் நீர்நிலைகளாக இருந்த இடங்கள் வகைமாற்றம் செய்து, அரசு அலுவலகங்களாகவும், நீதிமன்றங்களாகவும் கட்டப்பட்டுள்ளன. எனவே, மக்களின் வாழ்வுரிமையை பாதுகாப்பதும் அரசின் கடமை என்ற அடிப்படையில், பலவகைப்பட்ட அரசு நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க, நில வகைமாற்றம் செய்வதற்கான குழுவை நியமித்து ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், மனைப்பட்டா வழங்கப்பட்டதில், சில இடங்களில் கிராம வருவாய் கணக்கில் ஏற்றப்படாமல் உள்ளன. அவைகள் அனைத்தும் கணக்கில் திருத்தம் செய்யப்பட வேண்டும். பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதை மீட்டு, பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக புறம்போக்கு நிலங்களில் பயிர் செய்து வரும் விவசாயிகளுக்கும் நில உரிமைப்பட்டா வழங்கிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.