/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வணிகவரி அலுவலகம் கட்டட பூமி பூஜை
/
வணிகவரி அலுவலகம் கட்டட பூமி பூஜை
ADDED : அக் 04, 2025 06:50 AM
திண்டிவனம் : திண்டிவனம் அருகே உள்ள இடையன் குளம் பகுதியில் ரூ. 2.05 கோடி மதிப்பீட்டில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அவரப்பாக்கம் சார்பதிவாளர் அலுவலக கட்டடம் கட்டு ம் பணி, அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பூமி பூஜை நடத்தி பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மரக்காணம் சேர்மன் தயாளன், துணை சேர்மன் பழனி, மாவட்டத் துணை செயலாளர் ரவிக்குமார், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் ஷீலாதேவி சேரன், நகர செயலாளர் கண்ணன்,ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் விமலா, ஒன்றிய கவுன்சிலர் நாகஜோதி, மாவட்ட வர்த்தகரணி துணை தலைவர் பிரகாஷ், மாவட்ட அமைப்பாளர் திருமலை, மாவட்ட பிரதிநிதி தேவதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.