/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கரும்பு டன்னிற்கு ரூ.4 ஆயிரம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
/
கரும்பு டன்னிற்கு ரூ.4 ஆயிரம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
கரும்பு டன்னிற்கு ரூ.4 ஆயிரம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
கரும்பு டன்னிற்கு ரூ.4 ஆயிரம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
ADDED : நவ 06, 2025 05:10 AM

விழுப்புரம்: தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மாநிலக்குழு கூட்டம் விழுப்புரம் மா. கம்யூ., கூட்டரங்கில் நடைபெற்றது.
துணை தலைவர் நல்லாண் தலைமை தாங்கினார். பொது செயலாளர் ரவீந்திரன் அறிக்கை சமர்பித்தார்.
அகில இந்திய பொது செயலாளர் புஷ்பேந்திரகுமார் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், கரும்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் ஜோதிராமன், கோபிநாத், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், ஒரு டன் கரும்பிற்கு மாநில அரசு ரூ.4 ஆயிரம் விலை வழங்கிட வேண்டும். கரும்பு வெட்ட மானியமாக சக்கரை ஆலைகள் ரூ.500 மானியம் ஏற்று கொள்ள வேண்டும். விவசாய பயிர்களை அழிக்கும் காட்டு பன்றிகளை வனத்துறை அழித்திட வேண்டும்.
மகசூல் அதிகமாக தரும் புதிய கரும்பு ரகங்களை வேளாண் துறை அறிமுகம் செய்தல், நேஷனல், அமராவதி உட்பட மூடியுள்ள கூட்டுறவு ஆலைகளை மாநில அரசு திறந்து செயல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.