/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாயிகள் சங்கத்தினர் டி.ஆர்.ஓ.,விடம் கோரிக்கை
/
விவசாயிகள் சங்கத்தினர் டி.ஆர்.ஓ.,விடம் கோரிக்கை
ADDED : டிச 08, 2024 05:28 AM
விழுப்புரம், : தமிழக விவசாயிகள் வாழ்வாதார சங்கத்தினர், கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
விழுப்புரம் டி.ஆர்.ஓ., (பொறுப்பு) முத்து மீனாட்சியை சந்தித்து, சங்கத்தின் மாநில தலைவர் பரிமளம் தலைமையில் கொடுத்துள்ள மனு:
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரேஷன் கார்டு அடிப்படையில், தலா ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை வழங்க வேண்டும். சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.20 ஆயி ரம், பயிர் சேதத்திற்கு ெஹக் டேருக்கு ரூ.30 ஆயிரம், பாதிப்புக்குள்ளான பகுதிகளில், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு வழங்கிட சிறப்பு முகாம் நடத்திட வேண்டும்.
இதில் சங்கத்தின் மாநில துணை செயலாளர் செந்தில், மாவட்ட தலைவர்கள் காண்டிபன், முருகன், செயலாளர் லிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.