/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாயிகள் தின விழிப்புணர்வு ஊர்வலம்
/
விவசாயிகள் தின விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : டிச 25, 2024 03:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : சத்தியமங்கலத்தில் ராஜாதேசிங்கு வித்தியாலயா மெட்ரிக் மேல் நிலை பள்ளி மற்றும் அச்சரப்பாக்கம் எஸ்.ஆர்.எம்., வேளாண் கல்லூரி மாணவர்கள் இணைந்து விவசாயிகள் தினத்தை முன்னிட்டு 'விவசாயத்தை காப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பள்ளி தாளாளர் கவுசல்யா ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சப் இன்பெக்டர் செல்லதுரை, உதவி பேராசிரியர் சாத்தையா முன்னிலை வகித்தனர்.
பள்ளி வளாகத்தில் துவங்கி கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியாக விவசாயத்தை காப்போம் என்ற கோஷத்துடன் மாணவர்களின் ஊர்வலம் நடந்தது.
இதில் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.