/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்ல அனுமதிக்க விவசாயிகள் கோரிக்கை
/
காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்ல அனுமதிக்க விவசாயிகள் கோரிக்கை
காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்ல அனுமதிக்க விவசாயிகள் கோரிக்கை
காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்ல அனுமதிக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஆக 15, 2025 11:12 PM

செஞ்சி,; விளை நிலங்களையும், கரும்பு பயிர்களையும் பாழாக்கி வரும் காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்ல வனத்துறைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செஞ்சியில் முண்டியம்பாக்கம், செம்மேடு கரும்பு ஆலைகளின் கரும்பு விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார்.
பொருளாளர் பரமசிவம் தீர்மானங்களை வாசித்தார். துணைத் துலைவர்கள் கலிவரதன், கிருஷ்ணதாஸ், பெருமாள், துணைச் செயலாளர்கள் கங்கை கொண்டான், சங்கர், சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தல், சிறப்பு பருவத்திற்கு கரும்பு ஆலைகளுக்கு கரும்பு அனுப்பியுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக கிரையத் தொகையை வழங்க வேண்டும்.
மத்திய மாநில அரசுகள் கரும்புக்கு வயல் விலையாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகையை ஆலை நிர்வாகம் துரிதமாக பெற்றுத் தர வேண்டும்.
நந்தன் கால்வாய் திட்டத்தை விரைவாக நிறைவேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர முதல்வர், வேளாண் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காட்டுபன்றிகள் விளை நிலங்களையும், கரும்பு பயிர்களையும் பாழாக்கி வருவதால் இரண்டு மாவட்ட வனத்துறைக்கும் காட்டுபன்றிகளை சுட்டு கொல்ல அனுமதிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.