/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விநாயகர் சிலை தயாரிக்கவும் கரைக்கவும் வழிமுறைகள் அவசியம் கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தல்

ADDED : ஆக 15, 2025 11:11 PM
விழுப்புரம், ;விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வரும் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட வேண்டும். விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுகட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின் படி சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
களி மண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்.
சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவையும், பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களையும் பயன்படுத்தலாம்.
சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மாசுகட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.