/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பனை மரங்கள் வெட்டி அகற்றம் விவசாயிகள் தர்ணா
/
பனை மரங்கள் வெட்டி அகற்றம் விவசாயிகள் தர்ணா
ADDED : மார் 05, 2024 05:41 AM

விழுப்புரம்: அரசு விதிமுறை மீறி பனை மரங்களை வெட்டி அகற்றியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, உழைக்கும் விவசாயிகள் முன்னேற்ற இயக்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் முன் நேற்று காலை 11:00 மணிக்கு தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகளிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, மனு அளிக்கும்படி கூறியதன் பேரில் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:
திண்டிவனம் அருகே மேல்பேரடிகுப்பம் கிராமத்தில் தீவனுார் - கூட்டேரிப்பட்டு சாலையில் உள்ள பனை மரங்களை சிலர் பிடுங்கியுள்ளனர். பனை மரங்களை அகற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தும், அனுமதி பெறாமல் வெட்டி, வேறோடு பிடுங்கியுள்ளனர்.
அரசு விதிகளை மீறி செயல்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 2ம் தேதி திண்டிவனம் தாசில்தாரிடம் தகவல் கூறியும் பலனில்லை.
இந்த செயலுக்கு அரசு அலுவலர்கள் சிலர் உடந்தையாக இருந்துள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது

