/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உழவர் சந்தை கட்டுமான பணி: எம்.எல்.ஏ., ஆய்வு
/
உழவர் சந்தை கட்டுமான பணி: எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : நவ 16, 2025 11:53 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் உழவர் சந்தை கட்டுமான பணியை எம். எல் .ஏ .,ஆய்வு செய்தார்.
விக்கிரவாண்டி பேரூராட்சியில் பஸ் நிலையத்தின் பின்புறம் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய உழவர் சந்தை கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை விக்கிரவாண்டி எம்.எல்.ஏ ., அன்னியூர் சிவா ஆய்வு செய்து மேலும் கூடுதலாக விவசாயிகளுக்கு சில வசதிகள் செய்து தர ஒப்பந்தாரிடம் கூறினார்.முன்னதாக கக்கன் நகரில் புதிதாக கட்டப்படும் சமுதாயக் கூட பணிகளை பார்வையிட்டார்.
பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி, மாவட்ட தலைவர்கள் பாபு ஜீவானந்தம், ஹரிஹரன், நகர செயலாளர் நைனா முகமது, துணைச் செயலாளர் பிரசாந்த், இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்தி ,துணை அமைப்பாளர் சிவா, மாணவரணி அமைப்பாளர் யுவராஜ்,வர்தகரணி தலைவர் ராஜபாண்டியன், முகமது சைபுல்லா, சுகுமார்,சிவஞானம்,வீரசேகர்,ராஜா, கவுன்சிலர்கள் ஆனந்தி, சுதா ,ஒருங்கிணைப்பாளர் சுந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

