/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்ட விளையாட்டு போட்டிகளில் சிகா பள்ளி மாணவர்கள் சாதனை
/
மாவட்ட விளையாட்டு போட்டிகளில் சிகா பள்ளி மாணவர்கள் சாதனை
மாவட்ட விளையாட்டு போட்டிகளில் சிகா பள்ளி மாணவர்கள் சாதனை
மாவட்ட விளையாட்டு போட்டிகளில் சிகா பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : நவ 16, 2025 11:53 PM

விழுப்புரம்: பள்ளிக்கல்வி துறை சார்பில் மாநில, மாவட்ட அளவில் நடந்த விளையாட்டு போட்டியில் கப்பியாம்புலியூர் சிகா மேல்நிலை பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை யொட்டி, மாவட்ட, மாநில அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகளில் விழுப்புரம் அருகே கப்பியாம்புலியூர் சிகா மேல்நிலை பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாநில அளவில் தஞ்சாவூரில் நடந்த தடகள போட்டியில் மாணவர் ேஹமபிரசாத், 200 மீட்டர் ஓட்டத்தில் 2ம் இடத்தையும், 100 மீட்டர் ஓட்டத்தில் 3வது இடத்தையும் பிடித்தார்.
அதே போல், கரூரில் நடந்த மாநில அளவிலான ஜூடோ போட்டியில் மாணவர் லோகேஸ்வரன் 3வது இடத்தையும், விழுப்புரம் மாவட்ட அளவில் நடந்த 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் மாணவர்கள் ஹேமபிரசாத், திவாகர், கிஷோர், லோகேஸ்வரன் ஆகியோர் முதலிடத்தையும், மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் மாணவர் பரதன் முதலிடத்தையும், மாவட்ட அளவிலான டேக்ஹீண்டா போட்டியில் மாணவர்கள் முகிலன், மனோஜ், ஜனா ஆகியோர் முதலிடத்தையும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, முன்னாள் அமைச்சர் பொன்முடி, விசாலாட்சி பொன்முடி, முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணி ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். பள்ளியின் முதல்வர் கோபால், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜசேகரன், ராமராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

