/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உரம் தட்டுப்பாட்டை போக்கக் கோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு
/
உரம் தட்டுப்பாட்டை போக்கக் கோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு
உரம் தட்டுப்பாட்டை போக்கக் கோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு
உரம் தட்டுப்பாட்டை போக்கக் கோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு
ADDED : நவ 16, 2025 11:38 PM

விழுப்புரம்: விவசாயிகளுக்கான உரம் தட்டுபாட்டைப் போக்கக் கோரி, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் விழுப்புரத்தில் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.
விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் கலிவரதன் தலைமையில், நிர்வாகிகள் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மானிடம் அளித்த மனு:
விழுப்புரம் மாவட்டத்தில் சரியான முறையில் யூரியா, உரம் அனைத்தும் கூட்டுறவு சங்கங்களில் கிடைக்கவில்லை. இது பற்றி கூட்டுறவு சங்க உயர் அதிகாரிகளை கேட்டால், கேட்கும் விவசாயிகளுக்கு கலப்பு உரம் தருவதாக தெரிவிக்கின்றனர். சம்பா பருவம் துவங்கியுள்ள நிலையில், எதிர்காலத்தில் 5000 டன் வரை சம்பா பருவத்திற்கு தேவைப்படுகிறது.
விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் தனியார் உரக்கடைகளில் தடையின்றி உரம் கிடைக்க ஏற்பாடு செய்வதோடு, பயிர் இன்சூரன்ஸ் கூட்டுறவு சங்கங்களின் கடன் பெறும் விவசாயிகளுக்கு நெல், உளுந்து பயிர்களுக்கு விரும்பும் விவசாயிகளுக்கு தற்போது வரை இன்சூரன்ஸ் செய்து தராமல் உள்ளதால், இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை உள்ளது.
கலெக்டர் இவற்றை எல்லாம் ஆய்வு செய்து, தக்க நடவடிக்கை எடுத்து உரம் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
மனுவை பெற்ற கலெக்டர், துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசி பிரச்னைக்கு தீர்வு காண்பதாக தெரிவித்தார்.

