/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் மனு
/
கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் மனு
கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் மனு
கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் மனு
ADDED : அக் 06, 2025 11:46 PM

விழுப்புரம்; மர்ம விலங்குகளால் தாக்கப்பட்ட கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
செஞ்சி, திருவம்பட்டைச் சேர்ந்த விவசாயிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் சக்திவேல் தலைமையில் அளித்த மனு:
விழுப்புரம் மாவட்டத்தில் ஆடு, மாடுகள் மர்ம விலங்குகளால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். செஞ்சி ஆட்டு சந்தை மற்றும் தீவனுார் மாட்டு சந்தைகளை நள்ளிரவில் செயல்படுவதை தடுத்து, காலையில் நடத்த வேண்டும்.
திண்டிவனம், செஞ்சி தாலுகாக்களில் விவசாய மின் மோட்டார்கள் திருடு போவதை தடுக்க காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். திருடுபோன மோட்டார்களை கண்டுபிடித்து விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும். திருக்கோவிலுார் அணைக்கட்டில் இருந்து பம்பை ஆற்றிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.