/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிமென்ட் சாலை பணி; நகர மன்ற தலைவர் ஆய்வு
/
சிமென்ட் சாலை பணி; நகர மன்ற தலைவர் ஆய்வு
ADDED : அக் 06, 2025 11:46 PM

விழுப்புரம்; விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 2வது வார்டில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்ட சிமென்ட் சாலை பணிகளை, நகர மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் செல்லியம்மன் கோவில் தெரு பகுதியில் 15 வது நிதிமானியக்குழு திட்டத்தின் கீழ் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை போடும் பணி நடந்தது.
பணி முடிவு பெற்றதை யொட்டி, சாலையின் தரம் குறித்து, நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, பணியின் தரம் பற்றியும், மேலும் எங்கெங்கு சிமெண்ட் சாலை பணிகள் நடக்கிறது என்பது பற்றியும் கேட்டறிந்தார்.
கவுன்சிலர் அன்சர்அலி, வார்டு நிர்வாகிகள் முகமதுஅலி, நகராட்சி உதவி பொறியாளர் ராபர்ட் கிளேவ் உட்பட செயற்பொறியாளர்கள், உதவியாளர்கள் உடனிருந்தனர்.