/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்
/
வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : அக் 06, 2025 11:47 PM

விழுப்புரம்; விழுப்புரத்தில் பொது கலந்தாய்வு உத்தரவை நடைமுறைபடுத்தாமல் காலம் தாழ்த்துவதை கண்டித்து வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் தாலுகாவிற்கு உட்பட்ட வி.ஏ.ஓ.,க் களுக்கான பொது கலந்தாய்வு கடந்த மாதம் 18ம் தேதி விழுப்புரம் ஆர்.டி.ஓ., மூலம் நடத்தப்பட்டது. அன்றே கலந்தாய்வில் பங்கேற்றவர்களுக்கு கிராமம் ஒதுக்கீடு செய்யப்பட்ட வி.ஏ.ஓ.,க்களுக்கு பணி மாறுதலுக்கான உத்தரவு வழங்கப்பட்டது.
இந்த கலந்தாய்வை நடைமுறைப்படுத்தாமல் தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு பல நாட்களாகியும் பணி ஒதுக்கீடு செய்த கிராமத்திற்கு பணி செய்ய செல்ல முடியாத நிலை நீடிக்கிறது.
இது பற்றி துறையில் முறையான பதில் இல்லாததால், ஆத்திரமடைந்த தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள், ஆர்.டி.ஓ.,வை கண்டித்து நேற்று பகல் 12:00 மணிக்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் வள்ளல்பாரி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பக்கிரிசாமி கண்டன உரையாற்றினார். மாவட்ட செயலாளர் செல்வகுமார், பொருளாளர் கேசவன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும். மாநில அளவிலும் இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்வோம் என தெரிவித்தனர்.