/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புயல் நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் தலையில் துண்டுடன் மனு
/
புயல் நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் தலையில் துண்டுடன் மனு
புயல் நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் தலையில் துண்டுடன் மனு
புயல் நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் தலையில் துண்டுடன் மனு
ADDED : ஏப் 22, 2025 04:56 AM

விழுப்புரம்: விடுப்பட்ட விவசாயிகளுக்கு பெஞ்சல் புயல் நிவாரணம் கேட்டு, தலையில் துண்டு போட்டு கொண்டு கோஷம் எழுப்பி மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் கலிவரதன் தலைமையிலான விவசாயிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பச்சை துண்டை தலையில் போட்டு கொண்டு கோஷம் எழுப்பினர். விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டு, நிவாரண உதவி பட்டியலில் விடுபட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
பயிர் காப்பீடு பெற்றுத்தரவேண்டும், விதைகள் சரிவர கிடைப்பதில்லை. வேளாண் இணை இயக்குநரை, விவசாயிகள் தொடர்பு கொண்டால் மொபைல்போன் எடுப்பதில்லை.
விவசாயிகள் வேளாண் தகவல் பெற தனி தகவல் தொடர்பு கண்காணிப்பு மையம் தர வேண்டும். சம்பிரதாயத்திற்கு நடத்தப்படும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாற்றப்பட வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
பின்பு, இக்கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு சென்றனர்.