/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நுாறு நாள் வேலை வழங்கக்கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
நுாறு நாள் வேலை வழங்கக்கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நுாறு நாள் வேலை வழங்கக்கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நுாறு நாள் வேலை வழங்கக்கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 20, 2025 11:45 PM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் நுாறு நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்கக்கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் நகர தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சேகர், அமுதா முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் கல்ராயன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், நுாறு நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்த அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். சம்பளத்தை 600 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, துணைச் செயலாளர் கலியமூர்த்தி, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.