/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
/
பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : நவ 06, 2025 11:39 PM
விழுப்புரம்: இந்தாண்டு தோட்டக் கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயி களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
மாவட்ட தோட்டக் கலைத் துறை அலுவலக செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில், புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், 2025ம் ஆண்டு ரபி பருவத்திற்கு, வாழை, கத்தரி, சிவப்பு மிளகாய், மரவள்ளி ஆகிய தோட்டக்கலை பயிர் செய்துள்ள விவசாயிகள், அதற்காக காப்பீடு செய்து கொள்ளலாம்.
விவசாயிகள் தங்களுக்கு அருகாமையில் உள்ள தொடக்க வேளா ண்மை கூட்டுறவு வங்கிகள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம், பயிர் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஒரு ஏக்கர் வாழைப்பயிருக்கு 1147.51ரூபாய், கத்தரிக்கு 347.58, சிவப்பு மிளகாய்க்கு 449.81, மர வள்ளிக்கு 615.64, விவசாயிகள் காப்பீடு தொகையாக செலுத்தி பயன்பெறலாம்.
வாழை மற்றும் மரவள்ளிக்கு வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதியும், கத்தரி மற்றும் சிவப்பு மிளகாய்க்கு 2026ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதியும் காப்பீடு தொகை செலுத்த கடைசி நாள் ஆகும்.
மேலும், தகவல்களுக்கு அந்தந்த பகுதி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களை, விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.

