/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பன்னீர் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி: தோகைகளை அகற்றும் பணி தீவிரம்

ADDED : ஜன 04, 2024 03:43 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு கரும்பை அரசுக்கு சப்ளை செய்வதற்காக, தோகைகளை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 6 லட்சத்த்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் முழுக்கரும்பு வழங்கப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்வதற்காக வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை அலுவலர்கள் அடங்கிய வட்டார அளவிலான கொள்முதல் குழு அமைக்கப்படுகிறது.
இக்குழுவில் உள்ள அலுவலர்களால், வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரும்பின் தரம், உயரம் ஆகியவற்றை வேளாண்மைத்துறை அலுவலர்களால் சரி பார்க்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யப்பட உள்ளது.
இதுதொடர்பான விவரங்கள் உரிய படிவத்தில் பெறப்பட்டு கரும்பு கொள்முதலுக்கான உரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். கரும்பு கொள்முதல் பணிக்கு இடைத்தரகர்கள் தேவையில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தாண்டு, விழுப்புரம் மாவட்டத்தில் பிடாகம், குச்சிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் 100 ஏக்கருக்கு அதிகமாக, விவசாயிகள் பன்னீர் கரும்பு பயிர் செய்துள்ளனர்.
இதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கரும்பு பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இன்னும் 10 நாட்களில், பொங்கல் பரிசு தொகுப்புக்காக கூட்டுறவு சங்கங்களின் மூலம், கரும்பு கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதையடுத்து, கரும்பை அரசுக்கு சப்ளை செய்வதற்காக, கரும்புகளில் தோகைகளை அகற்றும் பணியை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்தாண்டு விழுப்புரம் அடுத்த குச்சிப்பாளையம் மற்றும் சில கிராமங்களில், ஆறு அடிக்கு குறைவான 5 அடி, ஐந்தரை அடி கரும்புகளை கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தினர்.
அப்போது, விழுப்புரம் கலெக்டர் நேரில் சென்று, விவசாயிகளிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை சரி செய்தார்.
இதேபோல், இந்தாண்டும் கரும்பு கொள்முதல் செய்யும்போது, பிரச்னைகள் எழாமல் தவிர்க்க அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கரும்பை அதிகாரிகள் மேற்பார்வையில், நேரடியாக கொள்முதல் செய்வதுடன், இடைத்தரகர்கள் தலையிடாமல் தடுக்க வேண்டுமென விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம், ஜன.4-
விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு கரும்பை அரசுக்கு சப்ளை செய்வதற்காக, தோகைகளை அகற்றும் பணியில்விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 6 லட்சத்த்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் முழுக்கரும்பு வழங்கப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்வதற்காக வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை அலுவலர்கள் அடங்கிய வட்டார அளவிலான கொள்முதல் குழு அமைக்கப்படுகிறது.
இக்குழுவில் உள்ள அலுவலர்களால், வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரும்பின் தரம், உயரம் ஆகியவற்றை வேளாண்மைத்துறை அலுவலர்களால் சரி பார்க்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட உள்ளது.
இதுதொடர்பான விவரங்கள் உரிய படிவத்தில் பெறப்பட்டு கரும்பு கொள்முதலுக்கான உரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
கரும்பு கொள்முதல் பணிக்கு இடைத்தரகர்கள் தேவையில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தாண்டு, விழுப்புரம் மாவட்டத்தில் பிடாகம், குச்சிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் 100 ஏக்கருக்கு அதிகமாக, பன்னீர் கரும்பு பயிர் செய்துள்ளனர்.
இதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.