/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகளிர் கல்லுாரியில் பேஷன் கருத்தரங்கு
/
மகளிர் கல்லுாரியில் பேஷன் கருத்தரங்கு
ADDED : அக் 12, 2024 11:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் 'பேஷன் பெட் 2024' தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
ஆடை வடிவமைப்பு மற்றும் அலங்கார துறை, வணிக நிர்வாகவியல் துறை சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு, வணிக நிர்வாகவியல் துறை தலைவர் வாசுகி வரவேற்றார். இ.எஸ்., கல்விக்குழு இணைச் செயலாளர் நிஷா செந்தில்குமார் தலைமை தாங்கினார். முதல்வர் அகிலா, கல்வியோடு, ஆளுமை வளர்ச்சியின் முக்கியத்துவம் பற்றி கூறினார்.
நிகழ்ச்சியில், 50 மாணவர்கள் கருத்தரங்க தலைப்பு தொடர்பான போட்டிகளில் பங்கேற்றனர்.