ADDED : டிச 24, 2024 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
செஞ்சி அடுத்த சிட்டம்பூண்டு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகள் ஜெயசுதா, 23; டிப்ளமோ நர்சிங் படித்துள்ள இவர், செஞ்சில் உள்ள கிளினிக் ஒன்றில் வேலை செய்து வந்தார்.
கடந்த 21ம் தேதி காலை வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஏழுமலை அளித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து, ஜெயசுதாவை தேடிவருகின்றனர்.