ADDED : ஆக 27, 2025 11:25 AM

செஞ்சி: மனைவி மற்றும் தாயை திட்டியதால், தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த நங்கிலிகொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் சடையாண்டி, 75; ஓய்வு பெற்ற கிராம உதவியாளர். இவருக்கு முனியம்மாள், பச்சை யம்மாள், 70, ஆகிய இரு மனைவிகள் உள்ளனர். பச்சையம்மாளுக்கு 5 மகன்கள் உள்ளனர். நான்காவது மகன் மருதாசலத்துடன், சடையாண்டி மற்றும் பச்சை யம்மாள் வசித்து வந்தனர்.
கடந்த, 24ம் தேதி பச்சையம்மாளும், மருதாசலம் மனைவியும் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருக்கனுார் சென்ற னர். அப்போது, வீட்டில் இருந்த சடையாண்டி, தனது மனைவி பச்சையம்மாள் மற்றும் மருதாசலத்தின் மனைவியை ஆபாசமாக திட்டி உள்ளார். இதில் ஆத்திரமான மருதாசலம், தந்தை சடையாண்டியை கட்டையால் தாக்கினார். பலத்த காயமடைந்த சடையாண்டி அதே இடத்தில் இறந்தார்.
இதுகுறித்து பச்சையம்மாள் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து மருதாசலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.