/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
/
வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 31, 2025 04:31 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.
வங்கி ஊழியர் சங்க உதவி பொது செயலாளர் லாசர் முன்னிலை வகித்தார். கூட்டமைப்பு பொதுச் செயலாளர் அமீர்பாட்ஷா கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், வங்கி துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் பணி என்பதை உறுதிபடுத்திட வேண்டும்.
துணை நிலை ஊழியர்களை பணி நியமனம் செய்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.