/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இருவர் சொந்தம் கொண்டாடிய இடத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் வேலி அமைப்பு

ADDED : செப் 15, 2024 06:40 AM

வானூர் : ஆரோவில் அருகே இருவர் சொந்தம் கொண்டாடிய இடத்திற்கு, உயர் நீதிமன்ற உத்தரவுபடி, போலீஸ் பாதுகாப்புடன் வேலி அமைக்கப்பட்டது.
ஆரோவில் அருகே இடையஞ்சாவடி செல்லும் சாலையில், தனியார் வாட்டர் கம்பெனி அருகில், 66; சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இடையஞ்சாவடியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், வசித்து வருகின்றனர். இந்த இடத்திற்கு புதுச்சேரியை சேர்ந்த ஒருவரும், அதே பகுதியில் வீடு கட்டி வசித்து வரும் நபரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்த நபர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தன்னுடைய இடத்திற்கு பாதுகாப்பு வேலி அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும், அதற்கு போலீசார் பாதுகாப்பு வேண்டும் என, கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, இடத்தை சுற்றி வேலி அமைக்க அனுமதி அளித்ததோடு, அதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டார். அதன்பேரில், கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., சுனில் முன்னிலையில், அந்த இடத்தை சுற்றி வேலி அமைக்கும் பணி நடந்தது. அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.