/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சரக்கு ரயிலில் வந்த உர மூட்டைகள்: வேளாண்மை அதிகாரி திடீர் ஆய்வு
/
சரக்கு ரயிலில் வந்த உர மூட்டைகள்: வேளாண்மை அதிகாரி திடீர் ஆய்வு
சரக்கு ரயிலில் வந்த உர மூட்டைகள்: வேளாண்மை அதிகாரி திடீர் ஆய்வு
சரக்கு ரயிலில் வந்த உர மூட்டைகள்: வேளாண்மை அதிகாரி திடீர் ஆய்வு
ADDED : டிச 04, 2025 05:29 AM

விழுப்புரம்: முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்த சி.ஐ.எல்., உர நிறுவனத்தின் 1,330 மெ.டன் யூரியா உர மூட்டைகளை விழுப்புரம் வேளாண்மை உதவி இயக்குநர் விஜயகுமார் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பயிர்களுக்கு தேவையான உரங்கள் யூரியா 4,182 மெட்ரிக் டன், டி.ஏ.பி., 1,895 மெ.டன்., பொட்டாஷ் 1,358 மெ.டன்., காம்ப்ளெக்ஸ் 8,250 மெ.டன்., சூப்பர் பாஸ்பேட் 1,889 மெ.டன்., என மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் சில்லரை விற்பனை நிலையங்களில் இருப்பு வைத்து விநியோகம் செய்யப்படுகிறது.
மேலும் விழுப்புரம் மாவட்டத்திற்கு உர விநியோக திட்ட இலக்கீட்டின் படி உர நிறுவனங்களிடம் இருந்து தற்போது சம்பா நெல் சாகுபடிக்கு தேவையான உரங்கள் பெற்று இருப்பு வைக்கப்படுகிறது. இந்த வகையில், சி.ஐ.எல்., நிறுவனத்தில் இருந்து 1,330 மெ.டன்., யூரியா உர மூட்டைகள் முண்டியம்பாக்கத்திற்கு சரக்கு ரயிலில் வந்தது. இந்த உரங்களை, வேளாண்மை உதவி இயக்குநர் விஜயகுமார் ஆய்வு செய்தார்.
இதில், 1,330 மெ.டன்., யூரியா உரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 448 மெ.டன்., தனியார் உரக்கடைகளுக்கு 207 மெ.டன்., லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
உர உரிமம் பெற்ற மொத்தம், சில்லரை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு மானிய உரங்களை பிற உரங்களோடு இணைத்து விற்பனை செய்ய கூடாது. மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு அனுப்புவதோ, விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டிற்கு மானிய உரங்களை வழங்க கூடாது. உரிமத்தில் அனுமதி பெறாமல் கலப்பு உரங்களை இருப்பு வைத்து விற்பனை செய்யக் கூடாது.
இந்த சம்பாவ பருவத்திற்கு தேவயான உரங்கள் போதியளவு இருப்பு உள்ளதாக, இணை இயக்குநர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

