
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : தலக்காணிக்குப்பம் கிராமத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் வயல் தின விழா நடந்தது.
வானுார் வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் வரவேற்று துறை மூலம் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசு திட்டங்களை எடுத்துரைத்தார்.
திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் திருவரசன், பயிர் வாரியாக முக்கிய ரகங்கள், சாகுபடி, குறைந்த செலவில் அதிக மகசூல் தொழில் நுட்பங்கள் குறித்து பேசினார்.
ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி தேவேந்திரன் முன்னிலை வகித்து விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கினார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் வாழ்வரசி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் தங்கம், ஆத்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் கோவிந்தசாமி செய்தனர்.