sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தீர்த்தகுளம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற இறுதி நோட்டீஸ்;   திண்டிவனம் நகராட்சி, வருவாய்த் துறையினர் அதிரடி

/

தீர்த்தகுளம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற இறுதி நோட்டீஸ்;   திண்டிவனம் நகராட்சி, வருவாய்த் துறையினர் அதிரடி

தீர்த்தகுளம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற இறுதி நோட்டீஸ்;   திண்டிவனம் நகராட்சி, வருவாய்த் துறையினர் அதிரடி

தீர்த்தகுளம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற இறுதி நோட்டீஸ்;   திண்டிவனம் நகராட்சி, வருவாய்த் துறையினர் அதிரடி

2


ADDED : ஆக 26, 2025 06:13 AM

Google News

ADDED : ஆக 26, 2025 06:13 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: ஐகோர்ட் உத்தரவைத் தொடர்ந்து, திண்டிவனம் திந்திரணீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தகுளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை வரும் 3ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என நகராட்சி, வருவாய்த்துறை சார்பில் நேற்று, ஆக்கிரமிப்பாளர்களிடம் இறுதி நோட்டீஸ் வழங்கப்பட்டது. திண்டிவனத்தில் நுாறாண்டு பழமை வாய்ந்த திந்திரிணீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தகுளம் உள்ளது. ஆரம்பத்தில் அகண்ட குளமாக அப்பகுதி மக்களின் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக இருந்து வந்தது.

இந்த குளத்தைச் சுற்றி கடந்த 30 ஆண்டுளுக்கும் மேலாக ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டியுள்ளனர். இதனால் குளம் சுருங்கி ஆக்கிரமிப்பு பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் குளத்தில் புகுந்ததால், குளம் மாசடைந்தது.

குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, ஐகோர்ட்டில் தனி நபர் ஒருவர் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

விசாரணைக்குப்பின், கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம், குளத்தைச் சுற்றியுள்ள 66 வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

ஆக்கிரமிப்புகளை வி ரைந்து அகற்ற வேண்டும் என்பதற்காக, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு போடப்பட்டது. இந்த குழுவினர் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, ஐகோர்ட்டிற்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

ஐகோர்ட உத்தரவின் பேரில், கடந்த ஜூலை 29 ம் தேதி, தீர்த்தக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிமிப்புகளை அகற்ற வேண்டும் என வீடு வீடாக நகராட்சி, வருவாய்த்துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை ஆகஸ்ட் 4ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன் பேரில் கடந்த 4ம் தேதி, நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள், குளத்தைச் சுற்றியுள்ள கடைகளை பொக்லைன் மூலம் அகற்றும் பணியை மேற்கொண்டனர்.

இதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து, மாற்று இடம் கொடுத்துவிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறி பிரச்னை செய்தனர். இதனால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை நகராட்சி நகரமைப்பு அலுவலர் திலகவதி, வி.ஏ.ஓ., அழகுவேல், கிராம உதவியாளர் மணிகண்டன் மற்றும் நகராட்சி ஊழியர்கள், வீடு வீடாகச் சென்று இறுதி எச்சரிக்கை நோட்டீஸ் ஓட்டினர்.

அதில் வரும் செப்டம்பர் 3ம் தேதிக்குள் ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்ய வேண்டும். இல்லையென்றால் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு வீடுகள் அனைத்தும் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 66 வீடுகளில், 10 கடைகள் காலி செய்யப்பட்டு விட்டதால், மீதமுள்ள 56 ஆக்கிரமிப்பாளர்களில் 12 பேருக்கு மட்டும் நேரில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மீதமுள்ள 44 பேருக்கு நகராட்சி சார்பில் வீட்டின் கதவில் இறுதி எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

தீர்த்தகுளத்தைச் சுற்றி கடந்த 50 ஆண்டுகளாக குடியிருந்தவர்களை வரும் 3ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்று இறுதி நோட்டீஸ் ஒட்டப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடுகளை இழப்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாற்று இடம் வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us