/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இளம்பெண்ணின் இருதய அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி
/
இளம்பெண்ணின் இருதய அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி
ADDED : அக் 09, 2025 02:31 AM

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே இளம் பெண்ணின் இருதய அறுவை சிகிச்சைக்கு அ.தி.மு.க., பிரமுகர் நிதியுதவி வழங்கினார்.
கயத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. அ.தி.மு.க ., கிளை செயலாளர். இவரது மகள் நர்மதா, 25; டிப்ளமோ நர்சிங் படித்தார். இருதய கோளாறு காரணமாக படிப்பை தொடர முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
மருத்துவ சிகிச்சைக்காக கோவிந்தசாமி, தொரவி அ.தி.மு.க., பிரமுகர் சுப்ரமணியிடம் நிதியுதவி கோரினார்.
அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி .,பரிந்துரை செய்ததின் பேரில், பி.கே.எஸ்., அறக்கட்டளை சார்பில் மருத்துவ சிகிச்சைக்கான நிதி உதவி தொகை ரூ. 2 லட்சத்திற்கான, காசோலையை நேற்று அ.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சுப்ரமணி, கோவிந்தசாமி மகள் நர்மதாவிடம் வழங்கினார். தொரவி ஒன்றிய கவுன்சிலர் ராஜாம்பாள் சுப்ரமணி, ராஜேந்திரன், சக்திவேல், கொங்காராம்பூண்டி ஊராட்சி தலைவர் ரேவதி ஸ்ரீதர், கயத்துார் முன்னாள் ஊராட்சி தலைவர் மாணிக்கவேல், சுப்பிரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.