/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., மூத்த நிர்வாகி குடும்பத்திற்கு நிதியுதவி
/
அ.தி.மு.க., மூத்த நிர்வாகி குடும்பத்திற்கு நிதியுதவி
அ.தி.மு.க., மூத்த நிர்வாகி குடும்பத்திற்கு நிதியுதவி
அ.தி.மு.க., மூத்த நிர்வாகி குடும்பத்திற்கு நிதியுதவி
ADDED : டிச 08, 2025 06:40 AM

விழுப்புரம்: விழுப்புரம் அ.தி.மு.க., மூத்த நிர்வாகி குடும்பத்திற்கு, நிதியுதவி வழங்கப்பட்டது.
விழுப்புரம் வடக்கு தெரு, ஷரிப் மஹால் பள்ளி வாசல் செயலாளராக பதவி வகித்தவர் ைஹதர் ஷரிப். மாவட்ட அ.தி.மு.க., சிறுபான்மையினர் இணை செயலாளராக பணியாற்றி வந்த இவர், கடந்த 29ம் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார்.
கட்சியின் மூத்த நிர்வாகியான இவரது குடும்பத்திற்கு, நகராட்சி 9வது வார்டு கவுன்சிலர் ராதிகா சார்பில், ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
வடக்கு நகர அ.தி.மு.க., செயலாளர் ராமதாஸ், துணைச் செயலாளர் வழக்கறிஞர் செந்தில், ஷரிப் மஹால் பள்ளி வாசல் முத்தவல்லி சுபான், ஹபீப்பாய், நகர பேரவை இணை செயலாளர் செந்தில், ஆதில்ஷரிப், சையத்ஹாஜி, பாபுஜி, முஹமது அலி, பிரபு, கார்த்தி உடனிருந்தனர்.