/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..
/
தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..
ADDED : அக் 13, 2025 12:29 AM

திண்டிவனம்; திண்டிவனம், தீயணைப்பு நிலையத்தின் சார்பில், தீ விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிலைய அலுவலர் மாரிச்செல்வம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், விபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தீ விபத்து ஏற்பட்டால் அவற்றை அணைக்கும் வழிமுறைகள் குறித்தும் செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு, விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், தீ விபத்து ஏற்பட்டால், தண்ணீர் வாளியை வைத்து தீயை அணைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் திண்டிவனம் லண்டன் கிட்ஸ் தனியார் பள்ளி மற்றும் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் கலந்து கொண்டனர்.