sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கு வரும் 9ம் தேதி தீ தடுப்பு பயிற்சி

/

 தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கு வரும் 9ம் தேதி தீ தடுப்பு பயிற்சி

 தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கு வரும் 9ம் தேதி தீ தடுப்பு பயிற்சி

 தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கு வரும் 9ம் தேதி தீ தடுப்பு பயிற்சி


ADDED : பிப் 07, 2026 04:24 AM

Google News

ADDED : பிப் 07, 2026 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கு வரும் 9ம் தேதி தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை, மருத்துவமனை அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பாதுகாப்பு காவலர்களுக்கு தீ தடுப்பு அடிப்படை பயிற்சி வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள 10 தீயணைப்பு நிலையங்களிலும் வரும் 9ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை இப்பயிற்சி நடக்கிறது.

பயிற்சியில், பணிபுரியும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டால் தீ பாதுகாப்பு உபகரணங்களைக் கொண்டு எவ்வாறு தீயை அணைப்பது. பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து அடிப்படை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியில் தனியார் நிறுவன பாதுகாவலர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us