/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 நாளை எழுத்து தேர்வு
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 நாளை எழுத்து தேர்வு
ADDED : பிப் 07, 2026 04:25 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு நாளை நடக்கிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நாளை 8ம் தேதி காலை 9:30 முதல் 12:30 மணி வரை பொது பாடப்பிரிவுகளுக்கான தேர்வில் 229 பேரும், பிற்பகலில் 2:30 மணி முதல் 5:30 மணி வரை தமிழ் தகுதி தேர்வை 232 பேரும் எழுத உள்ளனர்.
காலை 8:30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டுடன் வர வேண்டும். 9:00 மணிக்கு மேல் தேர்வுக் கூடத்திற்கு வரும் தேர்வர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். 12:30 மணிக்கு முன் தேர்வு அறையிலிருந்து வெளியேற அனுமதியில்லை.
பிற்பகலில் நடைபெறும் தேர்வுக்கு நண்பகல் 1:30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு வர வேண்டும். 2:00 மணிக்கு மேல் தேர்வுக் கூடத்திற்குள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். 5:30 மணிக்கு முன் தேர்வு அறையில் இருந்து வெளியேற அனுமதியில்லை.
மேலும், புகைப்பட அடையாள அட்டையின் அசல் அல்லது நகலைக் கொண்டு வர வேண்டும்.
தேர்வு கூடத்திற்கு உள்ளே மொபைல்போன் மற்றும் கை கடிகாரம் போன்ற மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. எளிய அனலாக் கைகடிகாரங்களை பயன்படுத்தலாம்.
தேர்வு மையங்களுக்கு செல்ல காலை 6:00 மணி முதல் அரசு பஸ்கள், விழுப்புரம் பஸ் நிலையத்திலிருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

