/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெள்ளத்தில் சிக்கிய தீயணைப்பு வாகனம் வீண்
/
வெள்ளத்தில் சிக்கிய தீயணைப்பு வாகனம் வீண்
ADDED : டிச 05, 2024 07:05 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு நிலையத்திற்கு சொந்தமான தீயணைப்பு வாகனத்தை சரிசெய்ய வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவெண்ணெய்நல்லுார் மலட்டாறு ஓரம் தீயணைப்பு நிலையம் அமைந்துள்ளது. மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கின் போது தீயணைப்பு நிலையம் பாதியளவு வெளத்தில் மூழ்கின.
இந்நிலையில் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ், நடமாடும் கால்நடை மருத்துவம் என அனைத்தும் நீழில் மூழ்கி வீணாகியது. மேலும் அங்கு வைத்திருந்த தீயணைப்பு மீட்பு உபகரண பொருட்கள் உட்பட அனைத்து பொருட்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.
இப்பகுதியில் அவரச உதவிக்காக அருகே உள்ள தீயணைப்பு நிலையத்தை நாட வேண்டிய சூழல் உள்ளது. எனவே உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தனி வாகனம் வழங்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.