ADDED : நவ 13, 2025 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம், ஆர்.எஸ்.பிள்ளை தெருவில் வசிப்பவர் கந்தன், 55; இவர், நேரு வீதியிலுள்ள ஒரு கடையில் பட்டாசுகள் விற்பனை செய்வதற்கு உரிமம் வைத்துள்ளார்.
இவருடைய வீட்டில் பட்டாசுகளை வைத்திருந்ததாக திண்டிவனம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப் இன்ஸ்பெக்டர் கவுதமன் நேற்று மாலை கந்தன் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதில் விற்பனைக்காக வைத்திருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தார். டவுன் போலீசார் கந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

