/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பட்டாசு கடை உரிமம் டி.ஆர்.ஓ., ஆய்வு
/
பட்டாசு கடை உரிமம் டி.ஆர்.ஓ., ஆய்வு
ADDED : அக் 27, 2024 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனத்தில் பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக டி.ஆர்.ஓ., ஆய்வு செய்தார்.
தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. திண்டிவனம் பகுதியில் தற்காலிக பாட்டாசு கடைகளுக்கு உரிமம் கோரி 16 பேர் வருவாய்த் துறையிடம் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, உரிமம் கோரியவர்களின் கடைகளுக்கு, விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி கடைகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.