/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் செவிலியர் கல்லுாரியில் முதலாவது பட்டமளிப்பு விழா
/
மயிலம் செவிலியர் கல்லுாரியில் முதலாவது பட்டமளிப்பு விழா
மயிலம் செவிலியர் கல்லுாரியில் முதலாவது பட்டமளிப்பு விழா
மயிலம் செவிலியர் கல்லுாரியில் முதலாவது பட்டமளிப்பு விழா
ADDED : ஜூன் 04, 2025 12:33 AM

விழுப்புரம் : மயிலம் செவிலியர் கல்லுாரியில், 2019- 2023ம் கல்வியாண்டு மாணவர்களுக்கு, முதலாவது பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, தட்சசீலா பல்கலைக் கழக வேந்தர் தனசேகரன் தலைமை தாங்கினார். கல்லுாரி இயக்குநர் செந்தில் வரவேற்றார்.
செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணைச் செயலாளர் வேலாயுதம், தட்சசீலா பல்கலை கழக இணைவேந்தர் டாக்டர் நிலா பிரியதர்ஷினி முன்னிலை வகித்தனர். செவிலியர் கல்லுாரி முதல்வர் தமிழ்ச்செல்வி வாழ்த்தி பேசினார்.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் கவுன்சிலின் பதிவாளர் அனிகிரேஸ் கலைமதி, கடந்த 2019 - 2023ம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற 72 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கி பேசினார்.
மயிலம் பொறியியல் கல்லுாரி முதல்வர் ராஜப்பன், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.