/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இ.எஸ்., பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்
/
இ.எஸ்., பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்
இ.எஸ்., பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்
இ.எஸ்., பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்
ADDED : ஆக 21, 2025 09:06 PM

விழுப்புரம்; விழுப்புரம் இ.எஸ்., பொறியியல் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் இந்திரா தலைமை தாங்கினார். ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் ராபர்ட், இ.எஸ்., பி.எட்., கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினார். இ.எஸ்., கல்வி குழும சேர்மன் செல்வமணி பேசுகையில், 'மாணவர்கள் கல்லுாரியில் நான்கு ஆண்டுகள் படிக்கும்போதே கல்வியை மட்டுமின்றி தனித்திறமை, தகுதியை வளர்த்து கொண்டால் நல்ல சம்பளத்திற்கு பல்வேறு நிறுவனங்களில் வேலைக்கு செல்லலாம்' என்றார்.
கல்லுாரி நிர்வாக அலுவலர் குப்புசாமி, ஆடிட்டர் சுரேஷ்பாபு மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.