ஏழுமலை பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்
ஏழுமலை பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்
ADDED : ஜூலை 27, 2026 02:51 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.
முதல்வர் ஆமோஸ் ராபர்ட் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கி, துவக்கி வைத்து, மாணவர்கள் ஒழுக்கத்தோடும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என பேசினார். துணைத் தலைவர் சங்கர் வரவேற்றார்.
இ.எஸ்., கல்விக்குழுமம் தலைவர் செல்வமணி, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இ.எஸ்., கல்வியியல் கல்லுாரி முதல்வர் செந்தில் முருகன், நிர்வாக அலுவலர் குப்புசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
பாலசுப்ரமணியன், விளையாட்டு துறை இயக்குநர் தமிழ்செல்வன், மேலாளர் பிரவீன் ராஜ், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர்கள் ராமகிருஷ்ணன், பாலச்சந்தர் உட்பட பலர் பங்கேற்றனர். துறை தலைவர் (பொறுப்பு) கல்பனா நன்றி கூறினார்.
