/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சூர்யா பொறியியல் கல்லுாரியில் முதல் ஆண்டு வகுப்புகள் துவக்கம்
/
சூர்யா பொறியியல் கல்லுாரியில் முதல் ஆண்டு வகுப்புகள் துவக்கம்
சூர்யா பொறியியல் கல்லுாரியில் முதல் ஆண்டு வகுப்புகள் துவக்கம்
சூர்யா பொறியியல் கல்லுாரியில் முதல் ஆண்டு வகுப்புகள் துவக்கம்
ADDED : ஆக 22, 2025 10:05 PM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
கல்லுாரி அரங்கில் நடந்த விழாவிற்கு நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
பேரூராட்சி மன்ற சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் சங்கர் வரவேற்றார் .
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மைல்ஸ்டோன் சமுதாய கல்லுாரி மேலாண்மை இயக்குனர் ராம்கணேஷ் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
சூர்யா கல்வி குழும கல்லுாரி முதல்வர்கள் அன்பழகன், வெங்கடேஷ்,பாலாஜி, துணை முதல்வர் ஜெகன், சிகா பள்ளி முதல்வர் கோபால், நகர செயலாளர் நைனா முகமது, துறை தலைவர்கள், பேராசிரியர்கள், முதலாமாண்டு மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர். நிறைவாக, துறை தலைவர் சண்முக சுந்தரம் நன்றி கூறினார்.