/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சூர்யா பார்மசி கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
/
சூர்யா பார்மசி கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
சூர்யா பார்மசி கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
சூர்யா பார்மசி கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
ADDED : நவ 01, 2025 02:48 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சூர்யா பார்மசி கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
கல்லுாரி அரங்கில் நடந்த விழாவிற்கு நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முதலாமாண்டு வகுப்புகளை துவக்கி வைத்து பேசினார்.
கல்லுாரி முதல்வர் அன்பழகன் வரவேற்றார்.
தமிழ்நாடு மாநில பார்மசி கவுன்சில் பதிவாளர் தமிழ் மொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்று டி.பார்ம், பி.பார்ம் வகுப்புகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு சான்றுகள் வழங்கியும், பார்மசியில் மாணவர்களின் எதிர்கால வாய்ப்புகள் குறித்தும் பேசினார்.
கல்லுாரி முதல்வர்கள் சங்கர், பாலாஜி, மதன் கண்ணன், வெங்கடேஷ், துணை முதல்வர்கள் ஜெகன், மோகன்,பேராசிரியர் ஜெகன்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேராசிரியர் சத்யா நன்றி கூறினார்.