/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அன்னிச்சங்குப்பத்தில் 2 இடங்களில் மீன் இறங்கு தளங்கள் திறப்பு
/
அன்னிச்சங்குப்பத்தில் 2 இடங்களில் மீன் இறங்கு தளங்கள் திறப்பு
அன்னிச்சங்குப்பத்தில் 2 இடங்களில் மீன் இறங்கு தளங்கள் திறப்பு
அன்னிச்சங்குப்பத்தில் 2 இடங்களில் மீன் இறங்கு தளங்கள் திறப்பு
ADDED : மே 28, 2025 11:51 PM

கோட்டக்குப்பம்: அன்னிச்சங்குப்பம், செட்டி நகரில் 2 இடங்களில் ரூ. 7 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்கு தளங்கள் திறப்பு விழா நடந்தது.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், சென்னை, திருவொற்றியூரிலிருந்து, காணொளி காட்சி வாயிலாக, அனிச்சங்குப்பம், செட்டிநகர் பகுதியில் 2 மீன் இறங்கு தளங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதையொட்டி, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் அனிச்சங்குப்பம், புதுக்குப்பம் பகுதிகளில் நடந்த திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றி வைத்து பேசுகையில்; இப்பகுதிகளில் ரூ. 7 கோடி மதிப்பில், 2 மீன் இறங்கு தளங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில், செட்டிநகரில் மீன்வலை பின்னும் கூடம், மீன் ஏலக்கூடம், 2 மீன் உலர்த்தும் தளம், உட்புற சாலை வசதி, ஹைமாஸ் விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
அனிச்சங்குப்பம் பகுதியில், மீன் வலை பின்னும் கூடம், மீன் ஏலக்கூடம், 2 மீன் உலர்த்தும் தளம், உட்புற சாலை வசதி, ஹைமாஸ் விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
செட்டிநகர் மற்றும் அனிச்சங்குப்பம் பகுதியில், 101 விசைப்படகுகள் மூலம், 2000க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது திறக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளத்தை மீனவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.
நிகழ்ச்சியில் மீன்வனம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் நித்திய பிரியதர்ஷினி, மரக்காணம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் தயாளன், துணை சேர்மன் பழனி, மாவட்ட கவுன்சிலர் புஷ்பவள்ளி குப்புராஜ், மீன்வளத்துறை உதவிபொறியாளர் முத்தமிழ்ச்செல்வி, கவுன்சிலர் துர்காதேவி, கீழ்புத்துப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.