/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மீன்பிடி தடை காலம் நாளை முதல் துவக்கம்
/
மீன்பிடி தடை காலம் நாளை முதல் துவக்கம்
ADDED : ஏப் 14, 2025 04:33 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட மீனவர்கள் நாளை முதல் தொடங்கும் மீன்பிடி தடை கால உத்தரவை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழகத்தில் கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனும், தமிழக கிழக்கு கடற்கரை திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு ஆண்டு ஏப்.15 முதல் ஜூன் 14 வரை, 61 நாட்களுக்கு, படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடை செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தடை ஆணைபடி, நடப்பாண்டிற்கு விசைப்படகுகள் மற்றும் இழுவலை படகுகள் மூலம் மேற்காணும் தடை செய்யப்பட்ட 61 நாட்களுக்கு கடலில் சென்று மீன்பிடிக்க வேண்டாம் என விழுப்புரம் மாவட்ட மீனவர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கடலில் மீன்கள் இனவிருத்திக்கு ஏற்ற காலமான, இந்த 61 நாட்கள் மீனவர்கள் கடலில் மீன்பிடிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலம், இடையூறு இல்லாத மீன் இனவிருத்தி மேம்பாட்டு, மீன்வளம் பெருக வாய்ப்புள்ளதால், மீனவர்கள் நலன் கருதி அரசு வகுத்துள்ள இத்தடை கால ஆணையின்படி மாவட்ட விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க வேண்டாம் என மீனவர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

