/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காரில் வந்து ஆடுகளை திருடிய கும்பல் திண்டிவனம் அருகே 5 பேர் கைது
/
காரில் வந்து ஆடுகளை திருடிய கும்பல் திண்டிவனம் அருகே 5 பேர் கைது
காரில் வந்து ஆடுகளை திருடிய கும்பல் திண்டிவனம் அருகே 5 பேர் கைது
காரில் வந்து ஆடுகளை திருடிய கும்பல் திண்டிவனம் அருகே 5 பேர் கைது
ADDED : மார் 22, 2025 03:42 AM

திண்டிவனம்: திண்டிவனம் அருகே காரில் வந்து ஆடுகளை திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் அடுத்த பாங்கொளத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் மனைவி மாலா, 50; இவருடயை வீட்டின் வெளியே ஆடுகளை கட்டியிருந்தார்.
கடந்த 19ம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் ஆடுகளின் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தார்.
அப்போது காரில் வந்த கும்பல் ஆடுகளைப் பிடித்து காரில் ஏற்றுவதைப் பார்த்து கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த கும்பல் காரை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடினர். அந்த கும்பலில் வந்த பெண் ஒருவரை ஊர் மக்கள் பிடித்து ஒலக்கூர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார், அந்த கும்பல் விட்டுச் சென்ற காரை பறிமுதல் செய்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அதில், சென்னை அடுத்த ஊமங்கலத்தைச் சேர்ந்த சிவக்குமார் மனைவி சரோஜினிதேவி, 45; என தெரிந்தது.
மேலும், தப்பியோடியவர்கள் காஞ்சிபுரம் சரத்குமார், 34; தாம்பரம் வெற்றி, 19; ஆடு வியாபாரி சென்னை, பொழிச்சலுார் பாரூக், 34; அனகாபுத்துார் ஜெய்குமார், 33; என தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, சரோஜினிதேவி உட்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.