ADDED : டிச 08, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் படைவீரர் கொடி நாள் நடந்தது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி கூறுகையில், 'படைவீரர்களின் நலனை பாதுகாக்கவும், அவர்களின் பணிகாலத்தை அங்கீகாரம் அளிக்கவும் அரசு சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு கடந்தாண்டு 1 கோடியே 38 லட்சத்து 50 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இந்தாண்டு கொடிநாள் நிதி வசூல் இலக்காக 1 கோடியே 43 லட்சத்து 22 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அலுவலர்கள் தங்கள் துறைக்கு ஒதுக்கீடு செய்த இலக்கை அடையும் வகையில் பணியாற்றிட முன்னாள் படைவீரர்கள் பாதுகாப்பிற்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்' என்றார்.

