sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றம்

/

மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றம்

மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றம்

மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றம்


ADDED : ஏப் 02, 2025 03:30 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம் : மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது.

அதனையொட்டி, இன்று 2ம் தேதி அதிகாலை சுவாமிக்கும், கொடி மரத்துக்கும் சிறப்பு அபிேஷக, ஆராதனை நடக்கிறது. பின், 5:46 கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து, 11:00 மணிக்கு வெள்ளி விமானத்தில் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமி கிரிவலம் நடக்கிறது.

இரவு 7:00 மணிக்கு வெள்ளி நாக வாகனத்தில் உற்சவர் அருள்பாலிக்கிறார். வரும் 6ம் தேதி இரவு 8:00 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருள்கிறார். 9ம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும் வெள்ளி குதிரை வாகனத்தில் மலை வலக்காட்சியும் நடக்கிறது.

வரும் 10ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. 11ம் தேதி காலை 9:00 மணிக்கு தீர்த்த வாரி உற்சவமும், இரவு தெப்பல் உற்சவமும் நடக்கிறது. 12ம் தேதி முத்து பல்லக்கு உற்சவம் நடக்கிறது.

ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்து வருகிறார்.






      Dinamalar
      Follow us